Criminal action against two women candidates in same rank issue: UPSC, recommendation | ஒரே ரேங்க் விவகாரத்தில் இரு பெண் தேர்வர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை: யு.பி.எஸ்.சி., பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: யு.பி.எஸ்.சி தேர்வில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இரு பெண் தேர்வர்கள், ஒரே மதிப்பெண்ணுக்கு உரிமை கொண்டாடுவதால் இருவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க யு.பி.எஸ்.சி., பரிந்துரைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2022-ம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இறுதி தேர்வு முடிவுகள் வெளியாகி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆயிஷா பாத்திமா, ஆயிஷா மர்க்ராணி ஆகிய இரு பெண் தேர்வகளின் தர வரிசை பட்டியலில் இருவரின் வரிசை எண், 7811744, 184-வது ரேங்க் பெற்று உள்ளதாக சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 184-வது ரேங்கிற்கு உரிமை கோருகின்றனர்.

latest tamil news

. இவ்வளவு குழப்பம் தெரியாமல் இருவருமே தேர்வு எழுதியதும், நேர்காணலில் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆயிஷா பாத்திமா வைத்துள்ள நுழைவுக்கான அட்டையில் யு.பி.எஸ்.சி.,யின் ரகசிய குறி உள்ளது. ஆயிஷா மக்ராணி வைத்துள்ள நுழைவு அட்டையில் ரகசிய குறி இல்லை.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் குழப்பத்தில் உள்ள யு.பி.எஸ்.சி., இரு தேர்வர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் இரு நுழைவு அட்டைகள் தயாரிப்பதில் எந்த தவறும் கண்டிப்பாக நடக்க வாய்ப்பில்லை. இதில் எங்கே தவறு நிகழ்ந்துள்ளது என்பதனை கண்டறிய இருவர் மீதும் கிரிமினல் நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.