தென்கொரியாவின் டேகு சர்வதேச விமான நிலையத்தில் ஆசியானா ஏர்லைன்ஸ் விமானம் சுமார் 200 பயணிகளுடன் தரையிறங்க ஆயத்தாமனது. அப்போது பயணி ஒருவர் கவனக்குறைவாக அவசரகாலக் கதவின்மீது கைவைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விமானத்தின் கதவு திறந்துகொண்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் பயத்தில் கத்திக் கூச்சலிட்டனர். பல பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சூழலை உணர்ந்து சுதாரித்துக்கொண்ட விமானி, காவல்துறை மற்றும் விமான நிலைய அவசரகால மருத்துவக்குழுவுக்கும் தகவலளித்தார்.
விமானம் தரையிறங்கியதும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து மருத்துவ சோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்துக்கு காரணமாக 30 வயது மதிக்கத்தக்க நபர் காவல்துறையால் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய காரணத்துக்காகக் கைதுசெய்யப்பட்டர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.