கிழக்கு உக்ரைன் நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனையின் மீது ரஷ்ய விமானப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த தாக்குதலில் 23 பேர் காயமடைந்துள்ளனர் என்று தாக்குதலுக்குள்ளான பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆபத்தான நிலையில் மூவர்
காயமடைந்த 23 பேரில் 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களில் மூன்று மற்றும் ஆறு வயதுடைய இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக ஆளுநர் செர்ஹி லிசாக் தெரிவித்துள்ளார்.
தீவிரமடைந்துள்ள தாக்குதல்கள்
உக்ரைனிய எதிர் தாக்குதலுக்கு முன்னதாக உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்கள் சமீபத்திய வாரங்களில் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சேதமடைந்த வைத்தியசாலையின் காணொளியை வெளியிட்டுள்ளார்.
குறித்த காணொளி பதிவில் “ரஷ்ய பயங்கரவாதிகள் மனிதாபிமானம் மற்றும் நேர்மையான அனைத்திற்கும் எதிரான போராளிகளின் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றனர்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
you may like this video