க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அனுமதி அட்டைகளை விரைவாக விண்ணப்பதாரர்களிடம் ஒப்படைக்கவும்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அனுமதி அட்டைகளை விரைவாக விண்ணப்பதாரர்களிடம் ஒப்படைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதிபர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், எக்காரணம் கொண்டும் பரீட்சை அனுமதி அட்டைகளை விண்ணப்பதாரர்களிடம் வழங்காது, அதிபர்கள் தம்வசம் வைத்திருக்கலாகாது என்பதுடன், எவரேனும் ஒரு விண்ணப்பதாரருக்கு அனுமதி அட்டை கிடைக்காமல் பரீட்சை எழுத முடியாமல் போகுமிடத்து அதன் முழுப் பொறுப்பையும் அதிபர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.