பழுதடைந்த இ-பைக் தீப்பிடித்து வெடிக்கும் போது அது எவ்வளவு ஆபத்தானது என்பதை விளக்கும் வீடியோவை லண்டன் தீயணைப்புப் படை வெளியிட்டுள்ளது.
வெடித்துச் சிதறிய இ-பைக்- உயிர்தப்பிய உரிமையாளர்
லண்டனில் உள்ள குடியிருப்பில், இ-பைக் பயங்கரமான வெடிகுண்டு போல் மாறிய பயங்கர சம்பவத்தில் பைக்கின் உரிமையாளர் நொடிப்பொழுதில் உயிருடன் தப்பித்துள்ளார்.
இது லண்டனில் சில வார இடைவெளியில் நடக்கும் இரண்டாவது சம்பவம் ஆகும். பேட்டரிக்கு தவறான சார்ஜிங் பொறிமுறையால் ஏற்படும் ஆபத்துகளை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
Screenshot-London Fire Brigade
சிசிடிவி-யில் பதிவான காட்சி
சிசிடிவியில் படம்பிடிக்கப்பட்ட இந்த வெடிவிபத்து மே 20 அன்று ரோஹாம்ப்டனில், Tangley Grove அடுக்குமாடி குடியிருப்பில் அவி கூரன்சிங் (Avi Gooransingh) என்பவரது வீட்டு வாசலில் நிகழ்ந்தது.
இது ஒரு சில வினாடிகளில் அந்த இ-பைக் பேட்டரி வெடித்து தீப்பந்தமாக மாறியது. அப்பகுதி முழுவதுமாக வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் அதிக எரியக்கூடிய மற்றும் நச்சு நீராவி காற்றில் சூழ்ந்தது.
பைக் உரிமையாளர் பைக்கிற்கு அருகில் நிற்பதைக் காணலாம், ஆனால் நொடிகளில் சுதாரித்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடிய அவர் காயமின்றி தப்பித்தார்.
பீதியடைந்த பைக் உரிமையாளர்
தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், துர்நாற்றம் காரணமாக ஏதோ சரியில்லை என்று தனக்குத் தெரிந்ததாக கூரன்சிங் கூறினார்.
பைக் வெடித்ததால் பீதியடைந்ததாக கூரன்சிங், “எனது குடும்பம் இறந்துவிடும் என்று நான் நினைத்தேன், குறிப்பாக நான் அதை நகர்த்தவில்லை என்றால். நானும் என் சகோதரியும் மீண்டும் பிளாட்டுக்குள் ஓடி 999 ஐ அழைத்தோம்.” என்று கூறினார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை 52 இ-பைக் மற்றும் 12 இ-ஸ்கூட்டர் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.