புதுடில்லி:புதுடில்லி மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன் தினம் இரவு ஒருவர் போன் செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையில், கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் அழைப்பு குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டது.
கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசியவர் ஹேமந்த் குமார்,48 என அடையாளம் காணப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
வேலையில்லாமல் தவிக்கும் ஹேமந்த் குமார், அளவுக்கு அதிகமாக மது அருந்திஅய் நிலையில், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து புரளி கிளப்பியுள்ளார் என்பது தெரிய வந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement