அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண இளம்பெண் ஒருவர் சிறுவயது ஏழ்மையை வென்று தற்போது முழு உதவித்தொகையுடன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்கு வாய்ப்பு பெற்றுள்ளார்.
சிறுவயது ஏழ்மை நிலை
டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 18 வயது Aurora Sky Castner என்பவரே சிறையில் பிறந்ததுடன், சிறுவயது ஏழ்மை நிலையையும் வென்று தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்கு வாய்ப்பு பெற்றவர்.
@AP
தொடக்கப் பள்ளி காலகட்டத்தில் தனக்கென நிர்ணயித்த வாழ்நாள் இலக்கை அவர் இதன்மூலம் அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது தாயார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பைபோலார் டிஸ்ஸார்டர் மூலம் பாதிக்கப்பட்ட தந்தையால் அவர் வளர்க்கப்பட்டார்.
இருப்பினும், அவருக்கு உதவ அப்பகுதியில் ஏராளமான மக்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியுள்ளனர்.
வியாழக்கிழமை பாடசாலை படிப்பை முடிக்கும் விழாவில் ஊர் கூடி கொண்டாடியுள்ளது.
@AP
மட்டுமின்றி சிறுவயது முதல் ஸ்கை காஸ்ட்னருக்கு வழிகாட்டியாகவும், இன்னொரு பெற்றோராகவும் செயல்படும் ஹேம்பி மற்றும் அவரது கணவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.