Foreign diplomats inspecting the construction work of a Hindu temple | ஹிந்து கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த வெளிநாட்டு தூதர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் நிறுவப்பட உள்ள முதல் ஹிந்து கோவிலின் கட்டுமானப் பணிகளை, 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டு துாதர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

கலைநயம்

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், சுவாமி நாராயணன் கோவிலுக்கான கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஏறத்தாழ 55 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் இக்கோவிலில், கலைநயத்துடன் கூடிய சிற்ப வேலைபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இக்கோவிலின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட, சுவாமி நாராயணன் கோவில் நிர்வாகம் மற்றும் இந்திய துாதரகம் சார்பில், வெளிநாட்டு துாதரக அதிகாரிகளுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.

latest tamil news

இதன் அடிப்படையில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த துாதரக அதிகாரிகள் இக்கோவிலுக்கு நேற்று வருகை தந்தனர்.

சிற்ப வேலைப்பாடு

இங்கு நடைபெறும் கோவில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த இவர்கள், கலைநயத்துடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சிற்ப வேலைப்பாடுகளை பார்த்து ரசித்தனர். இந்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடனும் கலந்துரையாடிய துாதரக அதிகாரிகள், தங்களுக்கு எழுந்த சந்தேகங்களையும் கேட்டறிந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.