காத்திருக்கும் ஆபத்து… கொட்டப்போகும் வரலாறு காணாத மழை.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

தென்மேற்கு பருமழை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை மூலம்தான் நாட்டிற்கு அதிக மழை பொழிவு கிடைக்கிறது. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் இந்த பருவமழை தென் இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகள் வழியாக வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் படிபடியாக முன்னேறி மழை பொழிவை கொடுக்கும்.
​ ஸ்டான்லி உட்பட 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து.. அன்புமணி ராமதாஸ் கண்டனம்!​அதிக மழைப் பொழிவுநாட்டின் பெரும்பாலான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் மழையாக இந்த தென்மேற்கு பருவமழை உள்ளது. தென்மேற்கு பருவமழையின் போது மழைப் பொழிவு பெறாத பகுதிகள் கூட ஆறுகளால் நீர்வளத்தை பெறும். இதனால் தென்மேற்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகமாகத்தான் இருக்கும்.
​ திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இனிமே அது கிடையாது.. தேவஸ்தானம் அதிரடி!​பருவமழை தாமதம்வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தொடங்க வேண்டிய பருவமழை சற்று தாமதமாக ஓரிரு நாட்கள் தள்ளி ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. தாமதமாக தொடங்கினாலும் மழைப்பொழிவில் எந்த குறையும் இருக்காது என்றும் வானிலை மையம் கூறியிருந்தது.
​ Trisha: 40 வயது பேரழகி… புடவையில் தெறிக்கவிட்ட த்ரிஷாவின் கலக்கல் போட்டோஸ்!​ஐரோப்பிய வானிலை மையம்இந்நிலையில் ஐரோப்பிய வானிலை மையம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வரலாறு காணாத அளவுக்கு இருக்கும் என்றும் இதனால் கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள் பலத்த மழையை எதிர்கொள்ளும் என்றும் கூறியுள்ளது. இதுகுறித்து வெஸ்ட் கோஸ்ட் வெதர்மேன் என்ற தனியார் வானிலை ஆய்வாளர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆதாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.
​ செந்தில் பாலாஜிக்கு போன் போட்ட உதயநிதி ஸ்டாலின்… கப்சிப்பான கரூர் உடன்பிறப்புக்கள்… பரபரப்பு தகவல்!​வரலாறுகள் முறியடிக்கப்படும்அதில் ECMWF எனும் ஐரோப்பிய வானிலை மையத்தின் வாராந்திர முன்னறிவிப்பில் ஜூன் மாதம் முழுவதும் கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் வலுவான மற்றும் சக்திவாய்ந்த பருவமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அடுத்த மாதம் அதாவது ஜூன் மாதம் பெய்யும் மழையால் ஏற்கனவே பதிவான பல மழை வரலாறுகள் முறியடிக்கப்படும் என்றும் வெஸ்ட் கோஸ்ட் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
​ திருப்பதிக்கு திடீரென படையெடுக்கும் பக்தர்கள்… காரணம் தெரியுமா?​தீவிரமடையும் மேற்கு காற்றுமேலும் கேரளாவில் மேற்கில் இருந்து வீசும் காற்று தீவிரமடைந்துள்ள என்றும் இதனால் கேரளாவில் முதல் கோடை காலம் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது என்றும் தனது டிவிட்டில் பதிவிட்டுள்ளார். வெஸ்ட் கோஸ்ட் வெதர்மேனின் இந்த பதிவு பீதியை கிளப்பியுள்ளது. இதனிடையே பசுபிக் பெருங்கடல் பகுதியில் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை உருவாகும் எல் நினோ இந்த ஆண்டு ஜூன் மாதம் உருவாக உள்ளதால் தென்மேற்கு பருவமழையில் இதன் தாக்கம் இருக்கும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
​ திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மாநகராட்சி பணியாளர்களா? அப்பட்டமான அதிகார அத்துமீறல்… அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!​வெஸ்ட் கோஸ்ட் வெதர்மேன்​​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.