இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆன்லைன் கேமிங் விளையாட்டான
BGMI
ஒரு ஆண்டிற்கு பிறகு தற்போது மீண்டும் விளையாட தயாராகவுள்ளது. இந்த விளையாட்டை உருவாக்கிய Krafton நிறுவனம் “மே 29 முதல் இந்தியாவில் மீண்டும் இந்த விளையாட்டை விளையாடலாம்” என்று தெரிவித்துள்ளது.
இந்த BGMI விளையாட்டிற்கு இந்திய அரசாங்கம் 3 மாத காலம் கெடு விதித்துள்ளது. இந்த மூன்று மாதங்கள் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் இந்திய அரசங்கத்தால் நேரடியாக கண்காணிக்கப்படும். அதன் பிறகு அதை தொடர்ந்து அனுமதிக்கலாமா? என்ற முடிவை அரசாங்கம் எடுக்கும்.
Ios பயனர்கள் இப்போதே Preload செய்யலாம். இந்த கேம் மே 29 முதல் வெளியானதும் விளையாட தொடங்கலாம். இந்த மாதம் தொடக்கத்தில் விரைவில் BGMI இந்தியாவில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த கேம் இம்மாதமே வெளியாகும் என்பதால் அதன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Netflix பயனர்கள் இனி பாஸ்வேர்ட் பகிர்ந்தால் கூடுதல் கட்டணம்! அதிர்ச்சி திட்டம்..
PUBG என்ற பெயரில் இருந்து BGMI என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த விளையாட்டு மீண்டும் வெளியானது. வெகு விரைவாகவே 100 மில்லியன் பயனர்களை பெற்றது. இந்தியா சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட எல்லை பிரச்சனை காரணமாக சீன செயலிகள் அனைத்தும் இந்திய அரசங்கத்தால் தடை செய்யப்பட்டன.
தற்போது மீண்டும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்போது நாம் இதை Download செய்தாலும் மே 29 பிறகே நாம் விளையாடமுடியும். இந்த மூன்று மாத காலத்தில் Krafton நிறுவனம் பயனர்களின் விவரங்களை எப்படி கையாளுகிறது என்பதை எல்லாம் கண்காணித்து அதன் பின்னரே இதற்கு முழு அனுமதி வழங்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்