North Korea Jailed 2-Year-Old For Life After Catching Parents With Bible | வடகொரியாவில் பைபிள் வைத்திருந்த குடும்பம் கைது: 2 மாத கைக்குழந்தைக்கு ஆயுள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: வட கொரியாவில் பைபிள் உடன் பிடிபட்ட கிறிஸ்தவர்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகவும், அவர்களின் 2 மாத கைக்குழந்தை உள்ளிட்ட பலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது.

கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வரும் வட கொரியாவில் பலவிதமான மற்றும் வினோதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அந்நாட்டில் நடப்பது என்ன என்பது உடனடியாக வெளியில் தெரிவது கிடையாது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், 2022 ம் ஆண்டிற்கான சர்வதேச மத சுதந்திரம் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: வட கொரியாவில் 75 ஆயிரம் கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதில் 2009 ல் பைபிள் வைத்திருந்த பலர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர்.

கைதானவர்களில் 2 மாத கைக்குழந்தையும் அடக்கம். இக்குழந்தை உள்ளிட்ட சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. முகாம்களில் இவர்கள் மோசமான சூழ்நிலையில் உள்ளனர். உடல்ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு 90 சதவீதம் பாதுகாப்பு அமைச்சகம் தான் பொறுப்பு. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.