சீனாவில் கொரோனா பரவிய அதே இடத்தில் வவ்வால் வைரஸ் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகையே உலுக்கிய கொரோனாவை யாராலும் மறக்க முடியாது. வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், வெவ்வெறு உருமாற்றங்களில் தொடர்ந்து பரவிக்கொண்டுதான் உள்ளது.
கொரோனா வைரஸின் ஊற்றாக கருதப்படும் சீனாவில், ஓமைக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் (XBB omicron subvariants) மீண்டும் பரவி வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒமிக்ரான் வகை கொரோனாவின் திரிபான எக்ஸ்.பி.பி வைரஸ் பரவலால் சீனாவில் ஏப்ரல் மாதத்தில் இருந்தே தொற்று பாதிப்பு சற்று உயரத் தொடங்கியிருப்பதாக புளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நடப்பு மாத இறுதி 4 கோடி பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா பரவிய அதே இடத்தில் வவ்வால் வைரஸ் பரவுவதற்கான அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே பரவிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கியது.
உலகம் முழுவதும் 70 லட்சம் உயிரிழப்புகள், வேலையிழப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதிய வைரஸ் குறித்த எச்சரிக்கையால் மக்கள் பீதியில் உள்ளனர்.
newstm.in