அண்மையில் விபுல் அம்ருத்லா ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் ரிலீசான படம் ‘தி கேரளா ஸ்டோரி’. பலவித சர்ச்சைகளை கிளப்பிய இந்தப்படத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்தப்படம் குறித்து நடிகர்
கமல்
ஹாசன் கருத்து தெரிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
‘தி கேரளா ஸ்டோரி’ பட டிரைலர் வெளியான போதே பல சர்ச்சைகள் கிளம்பியது. இந்தப்படத்தில் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாக கட்டப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மேலும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனும் இந்தப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மதச்சார்பின்மை கொண்ட கேரளா மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு ‘தி கேரளா ஸ்டோரி’ படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சங்கபரிவாரின் கொள்கையை பரப்புரை செய்வதற்காகவே இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடும் கண்டனம் தெரிவித்தார்.
Captain Miller: லியோவுடன் மோதப்போகும் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’: பரபரக்கும் கோலிவுட்.!
அத்துடன் மேற்கு வங்காளத்தில் இந்தப்படம் தடை செய்யப்பட்டது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த மே 5 ஆம் தேதி ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியானது. இந்நிலையில் 23 வது சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவில், நடிகர் கமலுக்கு இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை செலுத்தியதற்காக ‘IIFA Outstanding Achievement in Indian Cinema’ என்ற உயரிய விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட பிறகு நடிகர் கமலிடம் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘நான் முன்பே கூறியது போல் பிரச்சார படங்களுக்கு எதிரானவன் நான். வெறுமெனே லொகோவிற்காக ‘இது உண்மைக் கதை’ என எழுதினால் போதாது. அதில் உண்மை இருக்க வேண்டும். ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல என தெரிவித்துள்ளார். ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து கமல் கூறியுள்ள இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jailer: தமன்னா கொடுத்த ‘ஜெயிலர்’ பட அப்டேட்: ஹாப்பியான தலைவர் பேன்ஸ்.!