ரஜினிகாந்த்: அட்ராசக்க.. தமிழன்டா.. பெருமை சேர்த்த பிரதமர் மோடி.. செங்கோலுக்கு நன்றி.!

நாளை புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட உள்ளத. பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த திறப்பு விழா தான் நாடு முழுவதும் பேசு பொருளாக உள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத, தீவிர வலதுசாரி இந்துத்துவ கொள்கைவாதியான மற்றும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் காரணகர்த்தாவான சாவர்க்கர் பிறந்தநாளில் தான் இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட உள்ளது.

ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து, நாட்டை காட்டிக் கொடுத்த சாவர்க்கர் என கடுமையாக விமர்சனம் செய்த ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சி, திமுக, விசிக, கம்யூனிஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட மொத்தம் 20 கட்சிகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன. மேலும் தமிழகத்தின் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த நாளை துக்க நாளாக அனுசரிப்பதாகவும், தொண்டர்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தவும் அறைக் கூவல் விடுத்துள்ளது.

சாவர்க்கர் பிறந்தநாள் மட்டும் இல்லாமல் வேறொரு காரணமும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை சர்ச்சைக்குரியதாக மாற்றியுள்ளது. அதாவது நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவராகவும் குடியரசு தலைவர் உள்ளார். அந்த வகையில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அழைக்கப்படவில்லை. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒற்றைக் காரணத்தால் அவர் அழைக்கப்படவில்லை எனவும், பாஜகவின் சாதிவெறி இதில் அம்பலப்பட்டுள்ளது எனவும் இடதுசாரி ஜனநாயகவாதிகள் கொந்தளித்துள்ளனர்.

இதேபோல் தான் புதிய நாடாளுமன்றத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில், அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் அழைக்கப்படவில்லை என நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். 20 எதிர்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்ததால் ஆடிப்போன பாஜகவின் மூத்த தலைவரும், ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் எதிர்கட்சிகள் பங்கேறுமாறு அழைப்பு விடுத்தார்.

இந்தநிலையில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலைகள் கிளம்பிய நிலையில் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அதை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல்.

தமிழன்டா.. தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பாரதப்பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றி’’ என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம், பணமதிப்பு இழப்பு விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக குரல் கொடுத்த ரஜினி காந்த், தற்போது புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு ஆதரவை தெரிவித்துள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.