இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து டாடா நிறுவனம் புதிய நாடாளுமன்றத்தை சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் கட்டியது. இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
நாடாளுமன்றத்தின் கட்டுமான பணியானது சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் நிறைவடைந்த நிலையில் நாளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், திரையுலகினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல். #தமிழன்டா தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி” என பதிவிட்டுள்ளார்.
இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல்.#தமிழன்டா
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
— Rajinikanth (@rajinikanth) May 27, 2023