ஹொட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர்ந்த சிறுமி


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள புலம்பெயர் மக்களை தங்க வைக்கும் ஹொட்டலில் பிறந்து நான்கு மாதமேயான பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை பேச்சு மூச்சின்றி

மிட் டவுனில் உள்ள ஸ்டீவர்ட் ஹொட்டலில் இருந்து 911 இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஹொட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர்ந்த சிறுமி | Migrant Girl Found Dead In New York City Hotel @getty

வியாழக்கிழமை பகல் உள்ளூர் நேரப்படி 7.30 மணியளவில், குழந்தை பேச்சு மூச்சின்றி காணப்படுவதாக தகவல் அளித்துள்ளனர்.
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரை தங்க வைக்கப் பயன்படுத்தப்படும் நகரத்தில் உள்ள பல ஹொட்டல்களில் இதுவும் ஒன்று.

இந்த நிலையில், குழந்தை மாரடைப்பால் அவதிப்படுவதாக கண்டறிந்ததை அடுத்து, பெல்லூவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஈக்வடாரில் இருந்து பெற்றோருடன்

புலம்பெயர்ந்த குழந்தையின் மரணம் தற்போது நியூயார்க் காவல் துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், உடற்கூறு ஆய்வுக்கு பின்னர், குழந்தையின் மரண காரணம் தொடர்பில் தகவல் வெளியிடப்படும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஹொட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட புலம்பெயர்ந்த சிறுமி | Migrant Girl Found Dead In New York City Hotel @reuters

இதுவரை பெயர் குறிப்பிடப்படாத குழந்தை, ஜனவரி மாதம் ஈக்வடாரில் இருந்து தனது பெற்றோருடன் அமெரிக்காவிற்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், 2023ல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவில் இறந்த மூன்றாவது புலம்பெயர்ந்த குழந்தை இவர் என தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.