சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா இன்று காலை 10 மணியாளவில் பதவியேற்கிறார். கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிழச்சியில் நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
1962ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலா, சட்டப்படிப்பை முடித்து 1985-ம் ஆண்டு வக்கீல் பணியை தொடங்கினார். இதையடுத்து 2010ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2022 ஆம் ஆண்டு அதே நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் கடந்த ஏப்.19-ல் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலாவை நியமிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து எஸ்.வி.கங்கா பூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.