சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்த் மீது தாக்க்தல் நடத்திய சம்பவம் தெரியவந்திருக்கிறது.
இந்திய சினிமாவின் அடையாளமாக இருப்பவர் ரஜினிகாந்த். கலை பாதையை கமல் ஹாசன் தேர்ந்தெடுக்க கமர்ஷியல் பாதையை ரஜினிகாந்த் தேர்ந்தெடுத்துக்கொண்டார். இருப்பினும் அவ்வப்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்துவந்தார் ரஜினி. ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஒரு கட்டத்துக்கு மேல் முழுக்க முழுக்க கமர்ஷியல் பாதையில் ராஜபாட்டை நடத்த தொடங்கினார்.
உருவ கேலி சந்தித்த ரஜினிகாந்த்:
ரஜினி நடிக்க வந்த ஆரம்பத்தில் ஹீரோவாக வேண்டும் என்றால் வெள்ளையாக இருக்க வேண்டும் உள்ளிட்ட சில போலி பிம்பங்கள் இருந்தன. ஆனால் ரஜினிகாந்த்தோ கறுப்பு நிறம். இதன் காரணமாக அவர் பலமுறை உருவ கேலிக்கு ஆளாகியிருக்கிறார். இருப்பினும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத ரஜினி தனது திறமை, ஸ்டைல் ஆகியவற்றால் இன்று முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கிறார்.
ஜெயிலர், லால் சலாம்:
ரஜினிகாந்த் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர், ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இதில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதற்கு அடுத்ததாக ஜெய் பீம் இயக்குநர் இயக்கத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இதில் லோகேஷின் படம்தான் கடைசி படம் என கூறப்படுகிறது.
150க்கும் மேற்பட்ட படங்கள்:
ரஜினிகாந்த் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் 170ஆவது படமாக உருவாகிறது. இவற்றில் பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் படங்கள்தான். அப்படிப்பட்ட படங்களில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் உருவான நெற்றிக்கண் படத்தில் நடிப்பில் அதகளம் செய்திருப்பார் ரஜினிகாந்த்.
டபுள் ஆக்ஷன்:
கடந்த 1981ஆம ஆண்டு வெளியான அந்தப் படத்தில் ரஜினிகாந்த் தந்தை, மகன் என்ற இரு வேடங்களில் நடித்திருப்பார். அந்த இரண்டு வேடங்களில் தந்தையாக ரஜினி ஏற்றிருந்த கதாபாத்திரம் காலங்கடந்து பேசப்படுவது. ஒவ்வொரு சீனிலும் ப்ளேபாயாக கலக்கியிருப்பார். நடிகர் தனுஷ்கூட ரஜினியின் படங்களில் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து அதில் தந்தை ரஜினி கதாபாத்திரத்தை தான் ஏற்க வேண்டும் ஓபனாகவே தெரிவித்திருந்தார்.
ரஜினிமீது தாக்குதல்:
இந்நிலையில் ரஜினிகாந்த் மீது நெற்றிக்கண் பட ஷூட்டிங்கின்போது தாக்குதல் நடந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது, மருத்துவ கல்லூரி ஒன்றில் படத்துக்கான ஷூட்டிங் நடந்திருக்கிறது. அப்போது அங்கு பார்த்திருந்த சிலர் திடீரென ஓடிவந்து ரஜினி மற்றும் படக்குழுவினரை தாக்க ஆரம்பித்திருக்கின்றனர். அந்த சமயத்தில் ரஜினியை மிகவும் கஷ்டப்பட்டு காப்பாற்றினார்களாம். மேலும், ரஜினிகாந்த் கறுப்பாக இருந்ததால்தான் அந்தத் தாக்குதல் நடந்ததாம். இதனை நடிகர் குண்டு கல்யாணம் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.