சோழர் கால ஆட்சி முறையில் ஒரு மன்னர், மற்றொரு மன்னருக்கு ஆட்சியை ஒப்படைக்கும் போது செங்கோலை வழங்குவார் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் புதிய மன்னர் நல்லபடியாக நீதியுடன் ஆட்சி நடத்த வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. இது தமிழ் மரபுப்படி மன்னராட்சியில் முக்கியமான கடமையாக இருந்து வந்தது. இத்தகைய செங்கோல் தான் புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் இன்று காலை பிரதமர் மோடியால் பொருத்தப்பட்டது.
புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல்இது தமிழகத்தில் இருந்து 20 ஆதீன குருமார்களால் தேவாரம் பாடி பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தை, தமிழர்களை பெருமைப்படுத்தும் விஷயம் என்கிறது பாஜக தரப்பு. முன்னதாக 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது ஆதீனங்கள் மூலம் ராஜாஜி செங்கோல் தயாரிக்க ஏற்பாடு செய்தார்.நேருவிடம் ஒப்படைக்கப்பட்ட செங்கோல்இதை டெல்லிக்கு தனி விமானம் மூலம் கொண்டு சென்று மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் ஆதீனத்தின் துணைத் தலைவர், நாதஸ்வர வித்துவான் ராஜரத்தினம் பிள்ளை, ஓதுவார் ஆகிய மூவரும் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் மவுண்ட் பேட்டன் பிரபு வழங்கினார். இந்த செங்கோலை சென்னையில் உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் தயாரித்துள்ளனர்.
பிரதமர் மோடி வியூகம்இதுதொடர்பான ஆவணங்கள் இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூறுகின்றனர். ஆனால் நேரு கையில் செங்கோல் இருந்த புகைப்படங்கள் மட்டும் உள்ளன. அவருக்கு அருகில் ஆதீனம் இருப்பதையும், மவுண்ட் பேட்டன் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இதைத் தான் தற்போதைய பிரதமர் மோடி கையிலெடுத்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் என்னாச்சு?ஆனால் நீதி பரிபாலனம் நிலைநாட்டப்பட வேண்டுமெனில் உச்ச நீதிமன்றத்தில் கொண்டு போய் செங்கோலை வைக்க வேண்டியது தானே? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. இல்லையெனில் நாடாளுமன்றத்தை நடத்தக்கூடிய சபாநாயகரிடம் வழங்கப்பட்டிருக்கலாம். எதற்காக பிரதமரிடம் வழங்கப்பட்டது.
தமிழர் அரசியல்அதுமட்டுமின்றி இது தமிழர்களை வளைத்து போடும் அரசியல் என்கிறது எதிர்க்கட்சி தரப்பு. எனவே வாக்கு வங்கி அரசியலுக்கு இந்த ஏற்பாடு உதவுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி தான். இதன் தாக்கத்தை 2024 மக்களவை தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சோழர் கால ஆட்சி, செங்கோல், பிரதமர் மோடி அலை என்பதெல்லாம் பாமர மக்களை கவரும் யுக்தியாக பார்க்கப்படுகிறது.இதென்ன மன்னராட்சியா?தற்போது கூர்மையாக சிந்திக்கக் கூடிய சாமானியர்கள் அதிகம் வந்துவிட்டனர். பகவத் கீதை முதல் ராமாயணம் வரை விமர்சனக் கண்ணோட்டத்துடன் ஒவ்வொரு விஷயத்தை புட்டு புட்டு வைக்கின்றனர். இத்தகைய சூழலில் சோழர்களின் செங்கோல் என்ற மன்னராட்சி கால யுக்தி மக்களாட்சி காலத்தில் எடுபடாது. இது முற்றிலும் அபத்தானது என்ற கருத்து பரவலாக எழத் தொடங்கியுள்ளது.