சென்னை மத்திய பாஜக அரசு நாட்டின் பொருளாதாரத்தைப் படுகுழியில் தள்ளி விட்டதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. நேற்று சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனுக்கு அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சித் துறைத் தலைவரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான ராஜீவ் கவுடா வந்தார். அவருக்கு மாநில துணை தலைவர் கோபண்ணா, தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார் எம்பி, மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், முத்தழகன், அடையார் துரை […]