ஜப்பானில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புல்லட் ரயிலில் பயணம் செய்தார்.
ஓசாகா நகரில் இருந்து தலைநகர் டோக்கியோ வரை சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு தனது மனைவி துர்கா மற்றும் அதிகாரிகளுடன், ரயிலின் வசதிகளை கேட்டறிந்தபடி அவர் சென்றார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டில், உருவமைப்பில் மட்டுமல்லாது வேகத்திலும், தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றார்.
ஏழை எளிய நடுத்தர மக்கள் இத்தகைய ரயில்கள் மூலம் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.