இன்று நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டும்.. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டும் இன்று 75 ரூபாய் காயின் வெளியிடப்பட்டது. மத்திய அரசு மூலம் வெளியிடப்படும் நினைவு நாணயம் ஆகும்.
முக்கிய தலைவர் அல்லது தனிநபர் அல்லது நினைவுச்சின்னத்தை கொண்டாடுவதற்காக நினைவு நாணயம் வெளியிடப்படுவது வழக்கம். இந்தியாவில் கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல நினைவு நாணயங்கள் உள்ளன.ஆனால் இந்த புதிய 75 ரூபாய் நாணயத்தில் புதிய நாடாளுமன்றத்தின் படம் மற்றும் அசோக சின்னம் இரண்டும் அடங்கிய வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த நாணயம் 44 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட வட்ட வடிவில் இருக்கும். அதன் விளிம்புகளில் 200 சீர்வரிசைகளாக கோடுகளை கொண்டிருக்கும். 35 கிராம் எடை கொண்ட நாணயம் ஆகும் இது. இதில் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் தாமிரம், 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் ஆகியவை உள்ளன. உலோகங்கள் கலந்த அலாய் காயின் ஆகும் இது. இந்த கலப்பு காரணமாக தானாக இது கருப்பு நிறம் கிடைத்துள்ளது. ஆனால் பொதுவாக கருப்பு நிறம் வந்ததும் இதை பாலிஸ் செய்து வெள்ளையாக்குவார்கள். ஆனால் இங்கே அப்படியே கருப்பு நிறத்தில் வெளியிட்டு உள்ளனர். சிறப்பு நாணயம் என்பதால் வேறுபடுத்தி கட்டுவதற்காக இதை கருப்பு நிறத்தில் வெளியிட்டு உள்ளனர்.
சரி இந்த புதிய 75 ரூபாய் நாணயத்தை எவ்வாறு பெறுவது?
இந்த நாணயங்கள் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் அமைந்துள்ள நான்கு இந்திய அரசாங்க அச்சகங்களில் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக அதிக மதிப்புள்ள நாணயங்களைப் பெறுவதற்கு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அந்த நாணயத்தை அச்சடித்த அச்சகத்தின் இணையத்தில் நேரடியாக ஆர்டர் செய்ய வேண்டும்.இந்த சிறப்பு நாணயங்களை நேரடியாக ஆர்பிஐ அச்சகங்களில் வாங்கும் அரசு நிர்ணயம் செய்யும் விலையிலேயே பெறலாம். ஆனால் வெளியில் வாங்கினால் டிமாண்ட்-க்கு ஏற்ப விலையும் அதிகமாகும்.
இந்த 75 ரூபாய் சிறப்பு நாணயங்களை நேரடியாகப் பெற கொல்கத்தா மின்ட், மும்பை மின்ட் மற்றும் ஹைதராபாத் மின்ட் ஆகியவற்றின் இணையதளங்களை காணலாம். நினைவு நாணயங்களை வாங்குவதற்கான முன்பதிவுகள் பெரும்பாலும் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கும். நாணயத்தை வாங்க, மக்கள் நேரடியாக அச்சகத்திற்கு செல்லலாம்.