Ozotec Bheem Electric Two-Wheeler – ஓசோடெக் பீம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்

கோயம்புத்தூர் ஓசோடெக் ஆட்டோமொபைல் (Ozotec) நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பீம் எலக்ட்ரிக் மொபெட் மாடலில் உள்ள 10Kwh பேட்டரி கொண்ட வேரியண்ட் சிங்கிள் சார்ஜில் 515km ரேஞ்சு மாடலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கடலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, தென்காசி என பல்வேறு இடங்களிலும் பெங்களூருவிலும் டீலர்களை பெற்றுள்ள இந்நிறுவனம் ஃபிலியோ மற்றும் ஃபிலியோ+ என இரு மாடல்களை விற்பனை செய்து சுமார் 6000+ வாடிக்கையாளர்களை இரண்டு ஆண்டில் பெற்றுள்ளது.

Ozotec Bheem Electric Two wheeler

பீம் பேட்டரி மின்சார மொபெட் மாடலுக்கான முன்பதிவு 25 மே 2023 முதல் Ozotec அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் மற்றும் ஷோரூம்களிலும் துவங்கப்பட்டுள்ளது.

Ozotec bheem electric moped range

350Kg எடையை சுமக்கும் திறன் பெற்றுள்ள பீம் மாடலில் பொருத்தப்பட்டுள்ள BLDC மோட்டார் அதிகபட்சமாக 3Kw பவர் மற்றும் 22Nm டார்க் வழங்கி அதிகபட்ச வேகம் 65km/hr ஆகவும், 1,2,3 & Reverse என நான்கு ரைடிங் மோடுகள் பெற்றுள்ளது.

பிரெஷர் டை கேஸ்டிங் பேக்கில் (Pressure Die Cast – PDC) உள்ள LFP பேட்டரி ஆப்ஷன் ஆனது 1.75Kwh, 2.6Kwh, மற்றும் 4Kwh என மூன்று விதமாக கிடைக்கின்றது. இதில் உள்ள 4Kwh பேட்டரி மாடல் அதிகபட்சமாக 215km/charge ரேஞ்சினை வழங்கும். 0-100 சதவீத சார்ஜிங் பெற 4.5 மணி நேரம் தேவைப்படும். ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனும் உள்ளது.

இரண்டாவது, அலுமினிய அலாய் பேக்கில் (Aluminum Alloy) உள்ள Li-ion பேட்டரி ஆப்ஷன் ஆனது 5Kwh, 7Kwh, மற்றும் 10Kwh என மூன்று விதமாக கிடைக்கின்றது. இதில் உள்ள 10Kwh பேட்டரி மாடல் அதிகபட்சமாக 525km/charge ரேஞ்சினை வழங்கும். 0-100 சதவீத சார்ஜிங் பெற 4.5 மணி நேரம் தேவைப்படும். ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனும் உள்ளது.

Battery Pack Casing Pressure Die Cast (PDC) Aluminum Alloy
Ingress protection (Battery) IP67 IP67
Battery Chemistry LFP Li-Ion
Battery Nominal Voltage 48V 55.5V
Cell Size 32700 21700
Max Usable Capacity 4Kwh 10Kwh
Max Range per Charge 215km 515Km
Charging time 4.5hrs 4.5Hrs
Fast Charging Optional Optional
*Battery capacity (options available) 1.75Kwh,2.6Kwh,4Kwh 5,7,10Kwh

16 அங்குல வீல் பெற்று மூன்புறத்தில் 130 mm டிரம் மற்றும் பின்புறத்தில் 110m டிஸ்க் கொண்டு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்றுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் உள்ளது.

Ozotec bheem electric two-wheeler rear view

டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்,  ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி மூலம் ஸ்பீடோ மீட்டர், பேட்டரி இருப்பில் உள்ள சதவீதம, ரேஞ்சு இருப்பின் அளவு, ஓடோமீட்டர், கூகுள் மேப்ஸ், ஆவண பார்வை வசதி, ஆடியோ பிளேயர், வீடியோ பிளேயர் மற்றும் வானிலை முன்னறிவிப்பு  ஆகியவற்றை பெறலாம்.

Ozotec bheem

Ozotec bheem electric 2wheeler

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.