வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டோக்யோ: ஜப்பானுக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு மிக அதிகம் என டோக்யோ நகரில் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார்.
ஜப்பானில் டோக்யோ நகரில் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழை காப்பது தமிழினத்தை காப்பதாகும். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வணிகத்திற்காக ஜப்பான் சென்றுள்ளனர். தமிழுக்கும் ஜப்பான் மொழிக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜப்பான் தமிழர்கள் மத்தியில் உரையாற்றுவது மகிழ்ச்சி.
என்றைக்கும் உங்களில் ஒருவனாக இருப்பேன். ஜப்பான் என்றால் உழைப்பு, சுறு சுறுப்பு.தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஜப்பானுக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு மிக அதிகம். பொங்கல் திருவிழாவிற்கும் ஜப்பான் அறுவடை திருவிழாவிற்கும் ஒற்றுமைகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
புல்லட் ரயிலில் ஸ்டாலின் பயணம்!
ஜப்பானுக்கு சுற்றுலா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்தேன்.
ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை – எளிய – நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement