தமிழ்நாட்டில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மாநில அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. டாஸ்மாக் மது பாட்டில்களின் அதிகபட்ச விலை, வரிகள் உட்பட எவ்வளவு என்பது மது பாட்டில்களிலேயே பிரின்ட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால், பல இடங்களில் மதுபானக் கடைகளில் பாட்டில்களில் அச்சிடப்பட்ட விலையைவிட பத்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமாக இருந்து வருகின்றன.
அந்த பேனரில், “தமிழ்நாட்டிலுள்ள டாஸ்மாக்குகளில், மது பாட்டில்கள் `அதிகபட்ச விலை வரிகள் உட்பட’ என பிரின்ட் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதலாகப் பத்து ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. அந்த பத்து ரூபாய் யாருக்குச் செல்கிறது என்று தெரியும்வரை, கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது… அப்படி மீறி விற்பனை செய்தால் டாஸ்மாக் இழுத்து மூடப்படும். அந்தக் கூடுதல் பத்து ரூபாய் பெறும் பிச்சைக்காரன் யார் என்று எங்களுக்குத் தெரியவேண்டும். அதுவரை கடையை மூடுமாறு டாஸ்மாக் நிறுவனத்திடம் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இன்று சித்தர்காடு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகள் அருகே வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. பேனர்களை வைத்தவர்களே அவற்றை அகற்றிவிட்டதாக, டாஸ்மாக் மேலாளர் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், அங்கு மது பாட்டில்கள் வாங்கி வந்தவர்களிடம் கேட்டபோது, 130 ரூபாய் குவாட்டர் மது பாட்டிலுக்கு, டாஸ்மாக் கடையில் 140 ரூபாய் வாங்குவதாகத் தெரிவித்தனர்.