பள்ளி நண்பன் இறந்ததால் அதே தீயில் விழுந்து உயிரைவிட்ட சக நண்பன்!!

உயிர் நண்பன் இறந்ததால் அந்த இழப்பை தாங்க முடியாமல், அவரை எரித்த அதே தீயில் குதித்து சக நண்பன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் அடுத்த நாக்லா கங்கர் பகுதியில் அசோக் (42) என்ற நபர் வசித்து வருகிறார். இவரும் காதியா பஞ்சவடி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் (40) என்பவரும் பல ஆண்டுகளாக நண்பர்கள்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அசோக்கிற்கு உடல்நல கோளாறு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அசோக் உயிரிழந்தார்.

இதனால் அவரது ஆனந்த் மிகவும் கவலையுடன் இருந்தார். இறுதி சடங்குகள் முடிந்து அசோக்கின் உடல் யமுனை ஆற்றங்கரையில் எரிக்க கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உடலுக்கு தீ வைத்து விட்டு, அங்கிருந்தவர்கள் சென்றனர்.

அப்போது அங்கு நின்று தனியாக அழுது கொண்டிருந்த ஆனந்த், திடீரென எரிந்து கொண்டிருந்த தீயில் குதித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் ஆக்ரா மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். உயிர் நண்பரின் இழப்பை தாங்க முடியாமல் அவரை எரித்த அதே தீயில் குதித்து சக நண்பர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.