சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து முடிந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் டைடன்ஸ் அணியும் கோப்பையை வெல்ல பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் சென்னை அணியில் விளையாடி வரும் அம்பத்தி ராயுடு இறுதிப்போட்டியுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இவர் சென்னை அணிக்கு பல ஆட்டங்களில் வெற்றியை தேடி தந்தவர்.
முதலில் மும்பைக்காக விளையாடிய இவர், 2018இல் சென்னை அணிக்காக வாங்கப்பட்டார். அப்போது 603 ரன்கள் விளாசி 3ஆவது கோப்பையை வெல்ல முக்கிய நபராக இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ராயுடு அறிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள ராயுடு மும்பை மற்றும் சென்னை எனும் மகத்தான 2 அணிகளில் 204 போட்டிகளில் 14 சீசன்களில் 11 பிலே ஆப் சுற்றில் 8 ஃபைனல்களில் விளையாடி 5 கோப்பைகளை வென்றுள்ளேன்.
இந்த முறையும் கோப்பையை வெல்வேன் என்று நம்புகிறேன். இது சிறப்பான பயணம். இந்த மகத்தான தொடரில் மகிழ்ச்சியாக விளையாடினேன். இந்த முடிவில் யூடர்ன் அடிக்கப் போவதில்லை என பதிவிட்டுள்ளார்.
newstm.in