புதுடில்லி: மக்கள் அனைவரும், வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் அருங்காட்சியகம் சென்று, அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
மன் கி பாத் நிகழ்ச்சி குறித்து, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசித்த மக்கள் தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில், பலர் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கூறி உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குறித்து நாம் பேசி உள்ளோம். சில நாட்களுக்கு முன்னர், தெலுங்கு – காசி சங்கமம் நிகழ்ச்சியும் நடந்தது. இது நமது நாட்டின் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதற்கு உற்சாகம் அளிக்கிறது. ‛யுவ சங்கமம் என்பதற்கு கிடைத்த பலன்.
யுவ சங்கமத்தின் முதல் சுற்றில் 1200 இளைஞர்கள் நாடு முழுவதும் 22 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இதில் பங்கேற்றவர்கள், வாழ்க்கை முழுவதும் தங்கள் மனதில் நிற்கும் வகையிலான நினைவுகளுடன் திரும்பி உள்ளனர்.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அருங்காட்சியகத்தில், 1860 ம் ஆண்டிற்கு பிந்தைய 8 ஆயிரம் கேமராக்கள் சேகரித்து வைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளை மனதில் வைத்து அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.
பி.எம்., அருங்காட்சியகம், நாட்டின் முன்னாள் பிரதமர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது டில்லிக்கு அழகு சேர்த்து கொண்டுள்ளது. டில்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னம் மற்றும் போலீஸ் நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஏராளமான மக்கள் வந்து கொண்டு உள்ளனர்.
மக்கள், வாய்ப்பு கிடைக்கும் போது, இந்த அருங்காட்சியகங்களுக்கு செல்ல வேண்டும். இதனை சமூக வலைதளங்களில் பகிர வேண்டும். இது, நமது பாரம்பரிய கலாசாரத்துடன், இந்தியர்களை இணைக்க உதவும். .
சாவர்க்கரின் ஆளுமை, வலிமையும் பெருந்தன்மை கொண்டது. அவரது அச்சமற்ற மற்றும் சுயமரியாதை ஆகியவை , அடிமைத்தனத்தின் மனநிலையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை . இவ்வாறு மோடி பேசினார்.
மாணவியுடன் கலந்துரையாடல்
மன்கிபாத் நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி, பீகாரை சேர்ந்த விஷாகா என்ற மாணவியிடம் பேசினார். இந்த உரையாடலில் யுவசங்கமம் என்ற மத்திய அரசு திட்டத்தின்கீழ் நல்ல பயன்பெற்றதாகவும், தமிழகத்திற்கு வந்தபோது இங்கு இட்லி, தோசை, சட்னி, சாம்பார் ருசித்து சாப்பிட்டதாகவும் கூறினார். மேலும் இங்குள்ள தமிழக நண்பர்கள் பலர் என்னுடன் நட்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்