இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில் பிரபல Online Shooting விளையாட்டான BGMI மீண்டும் வெளியாகியுள்ளது. Krafton நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஆன்லைன் கேம் இதற்கு முன்பு இருந்ததை விட இப்போது மாறுபடுகிறது. முன்னதாக இருந்த BGMI வெர்ஷன் கடந்த ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது.
Krafton நிறுவனம் BGMI
விளையாடும் இந்திய கேமர்களின் டேட்டா மற்றும் விவரங்களை எல்லாம் சீனாவில் இருக்கும் Data Base ஒன்றில் சேமித்துவைப்பதாக இந்தியாவில் தடை செய்தது. தற்போது இதற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று முதல் மீண்டும் இதனை ரசிகர்கள் விளையாடலாம்.
இந்த விளையாட்டு முன்பு தடை செய்தபோது இருந்ததை விட இப்போது வெளியான 2.5
அப்டேட்
சற்று வித்யாசமாக உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இனி இந்த விளையாட்டை குறிப்பிட்ட நேரம் மட்டுமே விளையாடமுடியும். இதில் இருக்கும் சில முக்கியமான நடைமுறை மாற்றங்களை பற்றி பார்க்கலாம்.
புதிய அப்டேட் என்ன?
இந்த விளையாட்டை அதிகபட்சமாக 48 மணிநேரம் மட்டுமே விளையாடமுடியும். இந்த கேம் இன்றுமுதல் ios மற்றும் Android பயனர்கள் விளையாடலாம். ஏற்கனவே சிலருக்கு இந்த கேம் விளையாடும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இனி ஒரு நாளைக்கு 3 மணிநேரம் மட்டுமே திறக்கும். மற்றவர்களுக்கு ஒரு நாளைக்கு 6 மணிநேரம் வழங்கப்படும். மேலும் பெற்றோர்கள் அனுமதி மற்றும் தினசரி நேரம் போன்றவை கணக்கிடப்படும்.புதிய அப்டேட் மூலம் ‘Nusa’ என்ற புதிய மேப் திறந்துள்ளது. இது ஒரு வெப்பமான தீவு போல காட்சியளிக்கிறது. இதன் நீளம் 1×1 என்பதால் BGMI விளையாட்டிலேயே மிகவும் சிறிய மேப் இந்த Nusa ஆகும். இந்த மேப் மொத்த நேரமே 8 நிமிடங்கள் மட்டும்தான் என்பதால் நாம் விரைவாக விளையாடி முடிக்கலாம்.இந்த மேப் புதிதாக Ziplines, Elevators போன்ற வசதிகள் கொண்டிருப்பதால் நாம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு விரைவாக நகரலாம்.இதில் ஒன்றாக சேர்ந்து விளையாடும் நண்பர்களுக்கு உதவ ‘Super Recall’ என்ற வசதி உள்ளது. இதனால் குறைவான நேரத்தில் இறந்துவிட்டால் மீண்டும் அவர்களுக்கு உயிர்ப்பிக்க முடியும். Solo Mode மூலம் யார் உதவியும் இல்லாமல் நம்மால் Recall ஆக முடியும்.புதிய ஆயுதமாக Cross Bow உள்ளது. மேலும் புதிய Zip line ஒன்றைநம்மால் உருவாக்கமுடியும். அதுதவிர வீடுகளுக்கு நெருப்பு அம்புகள் மூலமாக தீவைத்து எரிக்கமுடியம்.புதிய வாகனமாக ஆப் ரேட்டிங் செல்லும் ATV ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் உயரமான செங்குத்தான இடங்களில் கூட இந்த ATV வாகனம் செல்லும். இதுதவிர ஏற்கனவே இருக்கும் மேப் அனைத்தும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்