இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் சமந்தா. திருமணமானாலும் கெரியர் அடிவாங்காது என்பதற்கு சமந்தா தான் சிறந்த முன்னுதாரணமாக இருந்தார். மேலும் விவாகரத்தானாலும் கெரியர் பாதிக்கப்படாது என்பதையும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
விஜய்யை புகழ்ந்த மிஸ்கின்!
படங்கள் தவிர்த்து வெப்தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிடாடல் வெப்தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானும் நடிக்கிறார். சமந்தாவும், வருண் தவானும் உளவாளிகளாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்தார் சமந்தா. விமான நிலையத்திற்கு வரும்போது சமந்தா அணியும் உடைகளை பார்க்கவே ஒரு கூட்டம் இருக்கிறது.
அந்த அளவுக்கு ஸ்டைலாக, க்யூட்டாக வருவார். இந்த முறை வெள்ளை நிற பேண்ட், கருப்பு நிற டாப், ஜாக்கெட்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, கருப்பு நிற பையை ஒரு தோளில் போட்டு ஸ்டைலாக போனில் பேசியபடி வந்தார்.
சமந்தாவின் உடையை விட அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது அவரின் காலணிகள் தான். விமான நிலையத்தில் இருந்தவர்களும் சரி, அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தவர்களும் சரி சமந்தாவின் காலில் இருந்த செருப்புகளை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள்.
ஆத்தி, இந்த செருப்பா என அப்படியே ஷாக் ஆகிவிட்டார்கள். அப்படி என்னய்யா அந்த செருப்பில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?. இருக்கே. Louis Vuitton pillow pool slides தான் சமந்தா அணிந்த காலணிகள் ஆகும். அந்த காலணிகளின் விலை ரூ. 2 லட்சத்து 58 ஆயிரத்து 97 மட்டுமே.
வெயிட் இல்லாத அந்த காலணிகள் அணிய ரொம்ப வசதியானது. அதனால் தான் அவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் சமந்தா.
அடேங்கப்பா, செருப்பை போய் ரூ. 2.6 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறாரே சமந்தா என பலரும் வியக்கிறார்கள். ரூ. 100 கோடி சொத்து வைத்திருக்கும் சமந்தா ரூ. 2.6 லட்சத்திற்கு செருப்பு வாங்கியதில் தவறு இல்லை. கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார். அதனால் அந்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது அவர் இஷ்டம்.
கெரியரை பொறுத்தவரை விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து குஷி படத்தில் நடித்து வருகிறார். குஷி மற்றும் சிடாடல் தொடரில் மாற்றி மாற்றி நடித்து வருகிறார்.
சிடாடல் தொடரில் ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. அந்த காட்சிகளில் டூப் எல்லாம் போடக் கூடாது என்று கூறி ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார் சமந்தா. அப்படி ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது காயமும் அடைந்திருக்கிறார். ஆனாலும் டூப் போட அனுமதிக்கவில்லை அவர்.
Samantha: டார்ச்சர் அனுபவிக்கும் சமந்தா: பரிதாபப்படும் ரசிகர்கள்
சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் சாகுந்தலம். ஏப்ரல் மாதம் ரிலீஸான சாகுந்தலம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. தன் 25 ஆண்டு கெரியரில் இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது இல்லை என சாகுந்தலம் படத்தை தயாரித்த தில் ராஜு தெரிவித்தார்.
சாகுந்தலத்தில் சகுந்தலாவாக அழகாக வந்திருந்தார் சமந்தா. அந்த படம் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.