இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
அமெரிக்காவின் தலைநகர் என்றால் வாஷிங்டன் என்பது பலருக்கும் தெரியும். அதுவே அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் எது? யாருக்காவது தெரியுமா? இதற்கான பதில் நியூயார்க். அந்நாட்டில் உள்ள 38 தனித்தனி மாகாணங்களை ஒன்றிணைத்தால் கிடைக்கும் மக்கள்தொகையை விட நியூயார்க்கில் அதிக மக்கள் வசிப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. கலாச்சார பெருமைகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், பொழுதுபோக்கு, கல்வி, சுற்றுலா, உணவு, கலை, விளையாட்டு எனத் தனித்துவமான பெருமைகளை உள்ளடக்கி காணப்படுகிறது.
விஞ்ஞானிகள் ஆய்வுஇப்படிப்பட்ட நகருக்கு தான் தற்போது சோதனை வந்துள்ளது. Earth Future என்ற ஜர்னலில் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாம் பர்சான்ஸ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். இதற்காக செயற்கைக்கோள் புகைப்படங்கள், டேட்டா மாடலிங், ஏராளமான கணித வழிமுறைகளை பயன்படுத்தியுள்ளனர்.மூழ்கும் நியூயார்க் நகரம்இந்த ஆய்வு கட்டுரையில், நியூயார்க் நகரில் உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், மிகப்பெரிய வீடுகள், சாலைகள் உள்ளிட்டவை கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் மூழ்கி கொண்டிருக்கிறது. சராசரியாக ஓராண்டிற்கு 1 முதல் 2 மில்லிமீட்டர் என்ற அளவில் நகரின் எடை அப்படியே பூமிக்குள் இறங்கி வருகிறது. இத்தகைய பூமி மேற்பரப்பின் மீதான அழுத்தம் என்பது உலகின் பல்வேறு இடங்களில் பார்க்க முடியும்.
பிரம்மாண்ட கட்டிடங்கள்ஆனால் ஒவ்வொரு நகருக்கும் அளவுகள் மாறுபடும். நியூயார்க் நகரில் லட்சக்கணக்கான கட்டிடங்கள் உயர்ந்து நிற்கின்றன. இவற்றை தாங்கி கொண்டிருக்கும் கான்கிரீட், உலோகங்கள், கண்ணாடிகள் உள்ளிட்டவற்றின் மொத்த எடை 1.7 ட்ரில்லியன் டன். இன்னும் புரியும்படி சொல்லப் போனால் இதே நகரில் இருக்கும் மிகவும் பிரம்மாண்டமான எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் போல 4,700 மடங்கு அதிக எடையை தாங்கி கொண்டிருக்கிறது.
மாறுபடும் அழுத்தம்இவ்வளவு எடையும் பூமியை தான் அழுத்திக் கொண்டிருக்கிறது. நியூயார்க் நகரிலேயே அழுத்தம் ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபடுகிறது. மிட் டவுன் மான்ஹாட்டன் கட்டிடங்கள் பாறைகளால் கட்டப்பட்டது. இங்கு அழுத்தம் என்பது சற்று குறைவு. அதுவே ப்ரூக்கிளின், குயின்ஸ், டவ்வுன் டவுன் ஆகிய பகுதிகளில் இருக்கும் கட்டிடங்கள் தளர்வான மண்ணால் கட்டப்பட்டது. இங்கு கொடுக்கப்படும் அழுத்தம் சற்று அதிகம்.
வெனிஸ் போல மாற வாய்ப்புஇதனால் இந்த கட்டிடங்கள் மூழ்கும் வேகம் அதிகமாக காணப்படும். நியூயார்க் நகரின் தெற்கு பகுதியில் நிலப்பரப்பிற்கும், கடல் மட்டத்திற்கும் இடையிலான வித்தியாசம் என்பது 1 முதல் 2 மீட்டர் மட்டுமே. நியூயார்க் நகரில் நடக்கும் நிகழ்வுகள் இப்படியே தொடர்ந்தால் நிச்சயம் ஒருநாள் நீரில் மிதக்க ஆரம்பித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. கிட்டதட்ட வெனிஸ் நகரம் போல மாறிவிடும்.
கண்டுகொள்ளுமா அமெரிக்க அரசு?அது எப்போது நடக்கும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. இதன் பின்னணியில் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களை மட்டும் காரணமாக சொல்லிவிட முடியாது. அதையும் தாண்டி பல்வேறு காரணிகள் இருக்கின்றன. எனவே விஷயம் பெரிதாக வெடிப்பதற்குள் உரிய முன்னேற்பாடுகளை அமெரிக்க அரசு செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.