சென்னை : ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு வியாபாரம் ஆனதாக தகவல் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் ஆதிபுருஷ்.
இப்படம் அடுத்த மாதம் ஜூன் 16ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
ஆதிபுருஷ் :
ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் ராமனாக பிரபாஸும், சீதையாக கீர்த்தி சனோனும் நடித்துள்ளனர். அதேபோல் ராவணன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடித்திருக்கிறார். இப்படத்தை பூஷன்குமார், கிரிசன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பாடல் வெளியானது :
ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஆதிபுருஷ் படத்தில் இடம்பெற்றுள்ள ராம் சீதாராம் என்கிற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதில் ராமர், சீதை இடையேயான காதலை உணர்த்தும் விதமாக பாடல் வரி அமைந்துள்ளது. இந்த பாடலுக்கு சச்செத் – பரம்பரா இசையமைத்துள்ளார்.
பல கோடிக்கு விற்பனை :
இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இத்திரைப்படம் 170 கோடிக்கு வெளியிடும் உரிமத்திற்கு வியாபாரம் ஆகி உள்ளது. பிபள் மீடியா கம்பெனி என்கிற தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுவதற்கான உரிமத்தை வாங்கியிருக்கிறது.
அடுத்தடுத்த படங்களில் :
இந்தத் தகவல்கள் எல்லாம் அதிகாரப்பூர்வமாக படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டால் திரையரங்களில் வெளியாவதற்கு முன்பே பல கோடிக்கு வியாபாரம் ஆன தெலுங்குப் படங்களின் வரிசையில் இந்த படமும் இடம்பிடித்துள்ளது எனலாம். நடிகர் பிரபாஸ் தற்போது ஜி எஃப் திரைப்பட இயக்குனர் ப்ரஷாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் நடித்து வருகிறார். நாக் அஷ்வின் இயக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.