பாஸ்போர்ட் கிடைத்ததை அடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
எம்.பி பதவியை இழந்த பின்னர் அரசு முத்திரை பதித்த தமது பாஸ்போர்ட்டை ராகுல்காந்தி ஒப்படைத்தார்.
நேஷனல் ஹெரால்ட் வழக்கு நிலுவையில் இருப்பதால் ராகுல், சோனியா உள்ளிட்டோர் வெளிநாடு செல்வதற்கு ஆட்சேபம் தெரிவித்த பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கக்கூடாது என நீதிமன்றத்தில் முறையிட்டார்.
ஆயினும் பத்து ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட் உரிமத்தை வழங்க இயலாது என்றும் மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பிக்கலாம் என்றும் கூடுதல் சிவில் நீதிமன்றம் தெரிவித்தது.