இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தனுஷ் தற்போது ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வருகின்றார். தற்போது அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்திய படமாக உருவாகி வரும் இப்படத்தின் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
இதையடுத்து தனுஷ் தன் ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடிக்க இருக்கின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கின்றது. தனுஷின் திரைப்பயணத்திலேயே அதிகமான பட்ஜெட்டில் உருவான படமாக இது இருக்கும் என தெரிகின்றது.
Sivakarthkeyan: இந்த முறை மிஸ் ஆகாது..உறுதியளித்த சிவகார்த்திகேயன்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
மேலும் பா.பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக வெற்றிகண்ட தனுஷ் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்குவதால் D50 மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜின் இயக்கத்தில் ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 என அடுத்தடுத்து பிசியாக பல படங்களில் நடிக்க இருக்கின்றார் தனுஷ்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, பாலிவுட், ஹாலிவுட் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றார் தனுஷ். இந்நிலையில் தனுஷ் முன்னிலை இயக்குனர்களிடம் மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் இயக்குனர்களின் இயக்கத்திலும் நடிக்க தயாராக இருக்கின்றார்.
அந்த வகையில் தற்போது ஒரு சில வளர்ந்து வரும் இயக்குனர்களின் இயக்கத்தில் தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் தற்போது அந்த லிஸ்டலில் ஏ.ஆர்.கே சரவணனும் இணைந்துள்ளார். ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான மரகதநாணயம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஏ.ஆர்,கே சரவணன்.
பாண்டஸி ஜானரில் வெளியான அப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் உருவாகியுள்ள வீரன் படத்தை இயக்கியுள்ளார் சரவணன். இப்படம் அடுத்த மாதம் திரையில் வெளியாக இருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் சரவணன் தனுஷிடம் கதை கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தனுஷிற்கு மரகதநாணயம் திரைப்படம் மிகவும் பிடித்தது. அதன் பிறகு அவரை சந்தித்து நான் இரண்டு கதைகளை கூறியுள்ளேன். விரைவில் அவருடன் இணைந்து படம் பண்ணுவேன் என கூறியுள்ளார் சரவணன்.
ஏற்கனவே பல இயக்குனர்கள் தனுஷுன் படம் பண்ணுவதற்காக வரிசையில் இருக்கும் நிலையில் தற்போது அந்த வரிசையில் ஏ.ஆர்.கே சரவணனும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.