தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான புத்தகம் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சனீஸ்வரர் கோவிலில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை செய்து வருகிறது மேலும் இந்த கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரமோற்சவம் விழாவும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாளை தேரோட்ட நிகழ்ச்சியும் ஒன்றாம் தேதி தெப்போற்சவ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை திருநள்ளாறு நகரப் பகுதி முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.