இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கின்றார் விஜய். படத்திற்கு படம் இவரின் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துகொண்டே செல்கின்றது. விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இவரது படங்கள் வசூலில் சாதனை படைத்து வருகின்றது. அதன் காரணமாகவே விஜய்யின் படத்தை தயாரிக்கவும், இயக்கவும் பலர் போட்டிபோட்டு வருகின்றனர்.
இந்திய சினிமாவில் வசூல் சக்ரவர்த்தியாக வலம் வரும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் வெளியாகும் முன்னரே தயாரிப்பாளருக்கு பலகோடி லாபத்தை ஈட்டி தந்துள்ளது. கிட்டத்தட்ட 400 கோடிவரை இப்படம் வெளியீட்டிற்கு முன்பே வியாபாரம் ஆகியுள்ளது.
இதன் காரணமாக விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 68 படத்திற்காக 200 கோடி சம்பளமாக வாங்குகிறார். அவரை வைத்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி லாபம் கிடைத்து வருவதால் விஜய் கேட்கும் சம்பளத்தை விட அதிகமான சம்பளத்தை கொடுத்து அவரது கால்ஷீட்டை வாங்க பலர் தவம் இருக்கின்றனர்.
Sivakarthkeyan: இந்த முறை மிஸ் ஆகாது..உறுதியளித்த சிவகார்த்திகேயன்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
இந்நிலையில் விஜய்யை தளபதி 68 படத்தின் மூலம் முதல் முறையாக இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் வெங்கட் பிரபு. கடந்த பல வருடங்களாக விஜய்யை இயக்க வேண்டும் என முயற்சித்த வெங்கட் பிரபுவிற்கு தற்போது தான் பலன் கிடைத்துள்ளது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
ஆனால் பல இயக்குனர்களுக்கு விஜய்யை இயக்கும் வாய்ப்பு கைநழுவி போயுள்ளது. அதில் இயக்குனர் சுராஜும் ஒருவர். படிக்காதவன், தலைநகரம், மருதமலை போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சுராஜ் பல வருடங்களுக்கு முன்பு விஜய்யை சந்தித்து கதை கூறி ஓகே வாங்கியுள்ளார். ஆனால் சில காரணங்களால் சுராஜின் இயக்கத்தில் விஜய் நடிக்கமுடியாமல் போய்விட்டதாம்.
கடந்த 2007 ஆம் ஆண்டு சுராஜின் இயக்கத்தில் அர்ஜுன், வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மருதமலை. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் கதையை தான் விஜய்யிடம் கூறியுள்ளார் சுராஜ். விஜய்க்கு கதை மிகவும் பிடித்து போகவே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் அந்த சமயத்தில் விஜய் திடீரென சச்சின் படத்தில் ஒப்பந்தமானதால் அவரால் மருதமலை படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டதாம். அதன் பிறகு தான் சுராஜ் அர்ஜுனை மருதமலை படத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்த தகவலை சுராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதனை கேட்ட ரசிகர்கள், அந்த காலத்தில் மருதமலை போன்ற ஒரு மாஸ் கமர்ஷியல் படத்தில் விஜய் நடித்திருந்தால் வேற லெவலில் இருந்திருக்குமே என பேசி வருகின்றனர். இதைப்போல தான் அர்ஜுனின் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்தையும் சில காரணங்களால் விஜய் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.