கடைசி பந்தில் த்ரில் வெற்றி!

சென்னை வெற்றி பெற 15 ஓவர்களில் 171 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கான்வே, ரஹானே, ராயுடு, துபே என அனைவரும் முக்கியப் பங்காற்ற கடைசி ஓவரில் ஜடேஜாவின் அதிரடியால் வெற்றி பெற்றது மஞ்சள் படை!
CSK-வுக்கு 171 டார்கெட்
மழையால் தடைப்பட்ட இறுதிப்போட்டி நள்ளிரவு 12.10 மணிக்கு தொடங்கும். DLS விதிப்படி சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டிருக்கிறது!#IPLFinal | #CSKvGT pic.twitter.com/7j9paEvp6C
— Sports Vikatan (@sportsvikatan) May 29, 2023

மழை காரணமாக போட்டி 15 ஓவர் ஆட்டமாக குறைக்கப்பட்டது. போட்டியை வென்று கோப்பையை வெல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 171 ரன்கள் டார்கெட்.
நடுவர்கள் மைதானத்தை சோதனையிட்டு வருகின்றனர்.
நடுவர்கள் மைதானத்தை சோதனையிட்டு வருகின்றனர்.
மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டால் சென்னை அணிக்கு நிர்ணயிக்கப்படும் டார்கெட் என்ன? (DLS Target)
19 overs – 207
18 overs – 198
17 overs – 190
16 overs – 181
15 overs – 171
14 overs – 162
13 overs – 153
12 overs – 143
11 overs – 133
10 overs – 123
9 overs – 112
8 overs – 101
7 overs – 90
6 overs – 78
5 overs – 66
சோதனையிடும் நடுவர்கள்; தொல்லை கொடுக்கும் ப்ராக்டீஸ் பிட்ச்!
இருபுறமும் உள்ள ப்ராக்டீஸ் பிட்ச்சில் தேங்கியிருக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 10:45 மணிக்கு களத்திற்குள் வந்த அம்பயர்கள் இரு அணி வீரர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 11:30 அடுத்தக்கட்ட பிட்ச் சோதனை நடத்தப்படும்.11:45 க்குள் போட்டி தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாது. 11:45க்கு மேல் செல்ல செல்ல ஓவர்கள் குறைக்கப்படும்.
நின்றது மழை! பிட்ச்சில் தேங்கிய தண்ணீர் என்னவாகும் ஆட்டம்?

அவுட் ஃபீல்டில் நீரை அகற்றும் பணியும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.10:45 மணிக்கு பிட்ச்சை நடுவர்கள் சோதனை செய்வார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கொட்டித் தீர்க்கும் மழை என்னவாகும் ஆட்டம்

குஜராத் அதிரடி, 5 நிமிடங்கள் கவர், ஆட்டம் காட்டும் மழை!

முதலில் பேட்டிங் செய்த குஜராத், அதிரடியாக ஆடி 214 ரன்களைக் குவித்துள்ளது. தமிழக வீரர் சாய் சுதர்சன் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் என 47 பந்துகளில் 96 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரரான சாஹா 54 ரன்கள் குவித்தார்.
இதனிடையே இன்னிங்ஸ் இடைவெளியில் மைதானம் கவர்களால் மூடப்பட்டது. முன்னதாக ஆட்டத்தின்போதே மழைத்தூறல் இருந்தாலும் ஆட்டத்தை நிறுத்தும் அளவுக்கு வீரியம் இல்லாததால் எந்தப் பிரச்னையும் இன்றி போட்டி நடைபெற்றது.
இன்னிங்ஸ் இடைவெளியில் மீண்டும் மின்னல் வெட்டியதை அடுத்து, பிட்ச்சை 5 நிமிடங்கள் கவர்கள்கொண்டு மூடினர். பின்னர் மீண்டும் கவர்கள் எடுக்கப்பட்டுவிட்டன. மழைக்கான சாத்தியக்கூறுகள் அதிகமான இருப்பினும் ஆட்டம் தடைப்படாமல் நடக்கவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
டாஸை வென்ற தோனி!
டாஸ் வென்ற தோனி; பௌலிங்கைத் தேர்வு செய்தார்.

இரு அணி வீரர்களும் இறுதிக்கட்ட பயிற்சியில்…



மாலை 6:30 – இப்போது வரை மழை இல்லை. இரு அணி வீரர்களும் மைதானத்திற்குள் இறுதிக்கட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
படையெடுக்கும் ரசிகர்கள், மழை வாய்ப்பிருக்கிறதா?






வார நாளிலும் கூட்டம் குறையவில்லை. துளியும் ஆர்வம் குறையாமல் ரசிகர்கள் மைதானத்திற்குப் படையெடுக்கும் காட்சி!
மழை இல்லை, ஆனால்?!



இப்போது வரை மழை இல்லை. ஆனால், மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடி வருவதைப் பார்க்க முடிகிறது. அதேபோல ரசிகர்களும் கேலரியில் கூடத் தொடங்கிவிட்டனர். இந்த மேகக்கூட்டம் மழையாக மாறுமா?
மந்தமான வானிலை!





வெயில் குறைய தொடங்கி மந்தமான வானிலை நிலவுகிறது. ரசிகர்கள் மைதானத்திற்குள் கூடத் தொடங்கியிருக்கின்றனர்.
டிக்கெட்டுக்காக பரிதவிக்கும் ரசிகர்கள்!
நேற்றைய நாளில் கையில் வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை (Physical Tickets) மழையில் தொலைத்த ரசிகர்கள் ரிசர்வ் டேவான இன்று மைதானத்திற்குள் வர முடியாமல் தவிப்பு. ஆன்லைனில் புக் செய்த QR Code ஐ வைத்து உள்ளே அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
சுட்டெரிக்கும் வெயில்; அகமதாபாத் லேட்டஸ்ட் அப்டேட்!








ரிசர்வ் டேவான இன்று மாலை 3:30 மணி நிலவரப்படி அகமதாபாத் மைதானத்தில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது.
இதே மைதானத்தில் 26 ஆம் தேதி நடந்த மும்பை vs குஜராத் தகுதிச்சுற்றுப் போட்டியன்றும் பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால், இரவில் மழை பொழிந்தது. நேற்றும் பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து மாலை 6:30க்கு மேல்தான் மழை பெய்யத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.