ப்ரோ படத்தின் புதிய மாஸ் போஸ்டர் வெளியீடு
கடந்த 2021ம் ஆண்டில் தமிழில் சமுத்திரக்கனி இயக்கி நடித்து ஓடிடி தளத்தில் நேரடியாக வெளிவந்த திரைப்படம் வினோதய சித்தம். அவருடன் தம்பி ராமையாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி. இப்படத்தை பீபுல் மீடியா பேக்டரி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படம் வருகின்ற ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். நடிகை கீட்டிக்கா சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திலிருந்து இரண்டு முதல் பார்வை வெளிவந்த நிலையில் இப்போது பவன் கல்யாண் மற்றும் சாய் தரம் தேஜ் இருவரும் ஒன்றாக இருக்கும் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.