​மனோ தங்கராஜை விளாசிவிட்ட குஷ்பு!'அமைச்சர் பதவிக்கே அவமானம் நீங்கள்'…

அமைச்சர் பதவிக்கே அவமானம் நீங்கள் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜை விளாசியுள்ளார் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு.

புதிய நாடாளுமன்றம்தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் நேற்று திறக்கப்பட்டது. 1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விழால் தமிழகத்தை சேர்ந்த 21 ஆதினங்கள் பங்கேற்றனர். அப்போது திருவாவடுதுறை ஆதினம் பிரமர் மோடிக்கு செங்கோலை வழங்கினார்.
​​செங்கோல்செங்கோலை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி மேளதாளங்கள் முழங்க செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே பிரத்தியேமாக அமைக்கப்பட்ட கண்ணாடி அலமாரியில் நிறுவினார் பிரதமர் மோடி. முன்னதாக செங்கோலுக்கு முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.
​​மனோ தங்கராஜ்செங்கோலை பிரதமர் மோடி பயபக்தியுடன் வணங்கிய போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது. இந்நிலையில் தமிழக அரசின் பால் வளத்துறை அமைச்சரான மனோ தங்கராஜ், பிரதமர் மோடி செங்கோல் முன்பு விழுந்து வணங்கிய போட்டோவை வெளியிட்டு, மூச்சு இருக்கா? மானம் ? ரோஷம்? என தரக்குறைவாக விமர்சித்திருந்தார்.
​​குஷ்பு கண்டனம்மனோ தங்கராஜின் இந்த பதிவுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக பிரமுகரும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்புவும் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், மனோ தங்கராஜ் பெண்களை இழிவுபடுத்துவதில் இன்பம் காண்பார், பெண்களை கேவலமாக கேலி செய்து மகிழ்வார், பொது மேடையில் பெண்களை மிகவும் இழிவாகப் பேசினால் சிரிப்பார் என்றுதான் தான் நினைத்திருந்ததாகவும் ஆனால் தற்போது அவர் மிகவும் தாழ்ந்தவர் என்பதை நிரூபித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
​​நாட்டின் பிரதமர்மேலும் நமது பிரதமரை இழிவுபடுத்துவதும், அவரைப் பற்றி மிகவும் கீழ்த்தரமாகப் பேசுவதும் மனோ தங்கராஜின் நிலையையும் வெறியையும் காட்டுகிறது என சாடியுள்ள குஷ்பு, அரசியல் ரீதியாக வேறு தளத்தில் இருந்தாலும், அவர் இந்த நாட்டின் பிரதமர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அதை நீங்கள் மதிக்க வேண்டும் என்றும் குஷ்பு அறிவுறுத்தியுள்ளார்.
​​மன்னிப்பு கேட்க வேண்டும்அமைச்சர் பதவிக்கே நீங்கள் அவமானம் என்று மனோ தங்கராஜுக்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ள குஷ்பு, பிரதமர் நரேந்திர மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரை வலியுறுத்தியுள்ளார். குஷ்புவின் இந்த பதிவிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அரசியலில் வெவ்வேறு கொள்கைகளை கொண்டிருந்தாலும், நாட்டின் பிரதமருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தாக வேண்டும் என்றும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
​​​குஷ்பு டிவிட்​​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.