ஸ்ரீநகர்: ஜம்முவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். விபத்துக்குள்ளான பேருந்து கட்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜஜ்ஜார் கோட்லி பகுதியில் விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தரப்பில், “மாதா வைஷ்ணோதேவி கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஜஜ்ஜார் கோட்லி அருகே விபத்துக்குள்ளானது.
இதில் 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளை ஜம்மு மூத்த காவல் கண்காணிப்பாளர் சந்தன் கோலி மேற்பார்வையிட்டு வருகிறார்.
விபத்துப் பகுதியில் போலீஸாருடன் பொது மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் ஜம்மு ஜெஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.