FAME II subsidy issue – எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உயராதா.! பழைய மானியம் தொடருமா ?

இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் FAME-II திட்டத்தின் கீழ் பயணாளிகளின் எண்ணிக்கை 9,89,000 விற்பனையை 5,64,000 மட்டுமே தகுதியுள்ளவை மற்றவை தகுதியற்றவை என நீக்கியுள்ளது.

இந்திய சந்தையில் அரசு செயற்படுத்தி வரும் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க மானியம் வழங்கி வருகின்றது.இவற்றில் முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் அனைத்து எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பளர்களும் சிக்கியுள்ளனர்.

FAME-2 மானியம்

தற்பொழுது வரை FAME-II திட்டதின் கீழ் இருந்த 989,000 விற்பனை எண்ணிக்கையை பல்வேறு மோசடிகளின் காரணமாக 564,000 ஆக குறைத்துள்ளது.

ஏப்ரல் 2024 இறுதிக்குள் இந்தியாவில் 10 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்குவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டிருந்தது. சமீபத்தில் இந்த இலக்கை நெருங்கி இருந்த நிலையில் ஓலா எலக்ட்ரிக், ஏதெர், ஹீரோ வீடா, டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததை ஒப்புக் கொண்டதாக கட்டணத்தை திருப்பி வாடிக்கையாளர்களுக்கு வழங்க துவங்கியது.

FAME-II பெறுவதற்கு நிறுவனங்களுக்கு ( Phased Manufacturing Programme – PMP ) உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க மானியம் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, உள்நாட்டில் பெறப்பட்ட உதிரிபாகங்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

hero vida electric scooter guinness world record

ஆனால், அரசு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்கள் கொண்ட மாடலுக்கும் மானியம் வழங்கியது. ஆனால் உள்நாடில் தயாரித்த பாகங்ளை பயன்படுத்தப்பட்டதாக போலியான தகவலை அரசுக்கு வழங்கி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களை பயன்படுத்தியதாக ஹீரோ எலக்ட்ரிக், ஒகினவா, ஆம்பியர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சிக்கியுள்ளது.

இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) நடத்திய விசாரணையில், பல நிறுவனங்கள் மின்சார மோட்டார்கள், கன்ட்ரோலர்கள், சார்ஜர்கள் மற்றும் முக்கிய பாகங்களுக்கு இறக்குமதியை மட்டும் நம்பியிருப்பது கண்டறியப்பட்டது.

FAME 2 அபராத தொகை

இந்திய கனரக தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுவரை

  • ஓகினவா ஆட்டோடெக் நிறுவனத்திடம் இருந்து ரூ.116 கோடி அபராதமும்
  • ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து 133 கோடி அபராதமும்
  • அடுத்து, கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி கீழ் செயல்படும் ஆம்பியர் எலக்ட்ரிக் நிறுவனம் ரூ.124 கோடி

Okinawa OKHI-90 maxi electric scooter price

ஒகாயா EV, ஜிதேந்திரா நியூ EV டெக், ரிவோல்ட் இன்டெலிகார்ப், கைனெடிக் கிரீன் எனர்ஜி, அவான் சைக்கிள், லோஹியா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ், துக்ரல் எலக்ட்ரிக் பைக்குகள் மற்றும் விக்டரி எலக்ட்ரிக் வாகனங்கள் இன்டர்நேஷனல் போன்றவை ஆய்வில் உள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு திரும்ப தரப்படும் தொகை

  • ஏதெர் எனெர்ஜி – ரூ.140 கோடி
  • ஓலா எலக்ட்ரிக் – ரூ.130 கோடி
  • டிவிஎஸ் மோட்டார் –  ரூ.15.61 கோடி
  • ஹீரோ வீடா – ரூ.2.23 கோடி

9,89,000 என இருந்த இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், 5,64,000 ஆக மாற்றப்பட்டுள்ளதால், தொடர்ந்து தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மானியம் தொடருமா அல்லது ஜூன் 1 ஆம் தேதி முதல் புதிய மானியம் நடைமுறைக்கு வருமா என இதுவரை அரசு உறுதிப்படுத்தவில்லை.

புதிய மானியம் செயல்படுத்தப்பட்டால் இரு சக்கர எலக்ட்ரிக் வாகனங்கள் விலை ரூ.35,000 வரை உயரக்கூடும்.

உதவி – இடி ஆட்டோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.