சென்னை: ஐபிஎல் 2023 கோலாகலமாக நிறைவு பெற்ற நிலையில், மே 29ம் தேதியன்று (திங்கள்கிழமை) இரவு இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்தை 5வது முறையாக வென்று, மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) சமன் செய்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியின் சிறந்த பதிவுகளைப் பார்ப்போம்.
6வது ஐபிஎல் பட்டத்தை வென்று சாதனை படைத்த அம்பதி ராயுடு
அம்பதி ராயுடு ஒரு வீரராக ஐபிஎல் பட்டத்தை வென்ற அணியில் ஆறாவது முறையாக இடம் பெற்று சாதனை படைத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு, ஒரு வீரராக (ஆறு) அதிக ஐபிஎல் பட்டங்களை வென்றவர்கள் பட்டியலில், ரோஹித் சர்மாவுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார்.
அதிக ஐபிஎல் பட்டங்களை வென்ற எம்ஐயின் சாதனையை சமன் செய்த சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்ற சாதனையை வைத்திருந்த மும்பை இந்தியன் அணியுடன் பட்டியலில் இணைந்தது. 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் பட்டங்களை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ், சொந்த மண்ணில் ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.