இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
CSK wins IPL final 2023: ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதை திரையுலகினர் கொண்டாடி வருகிறார்கள்.
ஐபிஎல்ஐபிஎல் இறுதிப் போட்டி மே 28ம் தேதி இரவு நடைபெற வேண்டியது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதும் போட்டியை காண மே 28ம் தேதி அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. இதையடுத்து மே 29ம் தேதி இரவு நடந்த இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது சென்னை அணி.விஜய் ஆண்டனிமேடையில் Happy News சொன்ன விஜய் ஆண்டனி!வெற்றிசர் ரவீந்திர ஜடேஜா அபாரமாக ஆடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். அந்த போட்டியை காண இயக்குநர் விக்னேஷ் சிவன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் அகமதாபாத் சென்றிருந்தார்கள் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சென்னை அணி செய்த சாதனையை கண்ணால் பார்த்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள் விக்னேஷ் சிவனும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும்.
சென்னைவிக்னேஷ் சிவன்ஸ்டேடியத்தில் இருந்த தோனியின் மனைவி சாக்ஷியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதை பார்த்த ரசிகர்களோ, தலைவி நயன்தாரா எங்கே அன்பான இயக்குநரே என கேள்வி எழுப்பியுள்ளனர். மகன்கள் உயிர், உலகை பார்த்துக் கொள்ள நயன்தாரா சென்னையிலேயே இருந்துவிட்டார் போன்று. கேன்ஸ் திரைப்பட விழாவுக்காக பிரான்ஸ் சென்ற விக்னேஷ் சிவன் நேராக அகமதாபாத் தான் வந்தார்.
Vignesh Shivan:ஏமாந்தது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மட்டும் அல்ல விக்னேஷ் சிவனும் தான்
தனுஷ்சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றதும் சர் ரவீந்தர் ஜடேஜாவை தோனி தூக்கினார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தனுஷ் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் சி.எஸ்.கே. அணி ஆடிய போட்டியை நேரில் கண்டு ரசித்தவர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சிலோகேஷ் கனகராஜ்லியோ பட வேலையில் பிசியாக இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டியை பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜால் ட்வீட் செய்யாமல் இருக்க முடியவில்லை. அந்த வெற்றியை தீ எமோஜி மூலம் பாராட்டியுள்ளார். சென்னை அணி ஜெயித்தால் அது நாம் ஜெயித்தது போன்று சந்தோஷப்படுவது இயற்கை தானே.
Yashika: யாஷிகாவும், அஜித் மச்சானும் எங்கு, எப்படி சந்தித்து காதலித்தார்கள்?
வாவ்த்ரிஷாவரலட்சுமி சரத்குமார், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பிந்து மாதவி உள்ளிட்டோரும் ஐபிஎல் இறுதிப் போட்டியை பார்த்து சந்தோஷப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் தங்களின் மகிழ்ச்சியை சமூக வலதளங்கள் மூலம் ரசிகர்களுடன் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். சிஎஸ்கே, தல, தோனி, சர் ஜடேஜா என திரையுலக பிரபலங்கள் சந்தோஷமாக ட்வீட் செய்கிறார்கள். சிலர் சந்தோஷத்தில் அழவும் செய்திருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள்உதயநிதி ஸ்டாலின்5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டி ட்வீட் செய்துள்ளார் நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின். தோனியின் கேப்டன்சி, ரவீந்திர ஜடேஜாவின் அருமையான ஃபினிஷிங்கை பார்த்து வியந்துவிட்டார் உதயநிதி. ட்விட்டரில் தன் #Yellove-ஐ வெளிப்படுத்தியுள்ளார் உதய்ணா. இதற்கிடையே சென்னை அணி வெற்றி பெற்றதும் தோனி கண்ணில் கண்ணீரை பார்த்த ரசிகர்கள் ஃபீல் செய்துவிட்டார்கள். தல அழுவுதே என அவர்களும் கண் கலங்கியிருக்கிறார்கள்.
பாராட்டு