சுயமரியாதையை இழந்து வாழ்வதில் அர்த்தமில்லை… கடுமையாக உழைத்து பெற்ற பதக்கங்களை கங்கை நதிக்கு அர்பணிக்கிறோம் என்று மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு கங்கையில் கலக்கப்போவதாக இதுகுறித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்துள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் எங்கள் வீட்டு மகள்கள் என்று அழைக்கும் பிரதமர் மோடிக்கு ஒருமுறை கூட எங்களுக்காக செவிகொடுக்கக்கூட மனம் ஒப்பவில்லை. மாறாக புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை நடத்தி கொடுங்கோல் ஆட்சி இது என்பதை உணர்த்தியிருக்கிறார். 🙏 […]