சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரவு நேர பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருபவர் சூர்யா. இந்த மருத்துவமனையில் பாலாஜி என்ற உள்நோயாளி தனது கையில் போடப்பட்டிருந்த ஊசியை அகற்ற கோரி நள்ளிரவு ஒரு மணி அளவில் மருத்துவர் சூர்யா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் மருத்துவப் உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் கத்தரிக் கோலை கொண்டு சூர்யாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த மருத்துவர் சூர்யா அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் திடீர் என வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என கூறியதோடு, உள்நோயாளி பாலாஜி கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்
சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் குற்றவாளி ஒருவர் பெண் பயிற்சி மருத்துவரை கத்தரிக்கோலால் குத்தியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அதே பாணியில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் நோயாளியாள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “கேரளாவில் இளம் மருத்துவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விடியா ஆட்சியில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவரை நோயாளி கழுத்தில் கத்திரியால் குத்தியுள்ளது அதிரச்சியளிக்கிறது! உயிர்காக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் இளம்மருத்துவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விடியா ஆட்சியில் அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையின் மருத்துவரை நோயாளி கழுத்தில் கத்திரியால் குத்தியுள்ளது அதிரச்சியளிக்கிறது!
உயிர்காக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். pic.twitter.com/TVTHiuu8Tt— DJayakumar (@offiofDJ) May 30, 2023