ஹரித்வார் ஹரித்வார் மாவட்ட எஸ் பி ,மல்யுத்த வீராங்கனைகள் பதக்கங்களைக் கங்கையில் வீசுவதாக உள்ளது குறித்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இன்று மல்யுத்த வீராங்கனைகள் சமூக ஊடகங்களில் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் அனைவரும் கடந்த 28-ஆம் தேதி எங்களுக்கு என்ன நடந்ததென்று பார்த்தீர்கள். ஜந்தர் மந்தரில் நாங்கள் அறவழியில்தான் போராடியும் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீராங்கனைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைக்கு நீதி கோரியதால் நாங்கள் தவறிழைத்துவிட்டோமா?ஆனால் அரசு அதிகாரிகள் எங்களைக் கிரிமினல் குற்றவாளிகள் போல் நடத்தியுள்ளனர். நாங்கள் எங்களின் பதக்கங்களை யாரிடம் கொடுக்கலாம் என்று யோசித்தோம். குறிப்பாகக் […]