வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மீண்டும் திட்டக்கமிஷனை கொண்டு வர வேண்டியது அவசியம் என நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2014-ல் பா.ஜ. ஆட்சிக்கு வந்தவுடன் , நாட்டில் அமலில் இருந்த திட்டக்கமிஷனுக்கு மாற்றாக நிடிஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பான இந்த அமைப்பில் பிரதமர் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கவுன்சிலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நிடி ஆயோக் நிர்வாக கவுன்சிலின் எட்டாவது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இதில் அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் மேற்குவங்கம், தெலுங்கானா, உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை.
இது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது, நிடிஆயோக் அமைப்பால் மாநிலங்களுக்கு எந்த பலனும் இல்லை.மாநிலங்கள் வளர்ச்சி அடைய வேண்டுமெனில், மீண்டும் திட்டக்கமிஷனை கொண்டு வரவேண்டியது அவசியம் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement