நின்றுபோன கட்டிட வேலை… தம்பிக்கு சம்மன்.. செந்தில் பாலாஜியை சுழன்று தாக்கும் ரெய்டு புயல்!

கரூர் புறவழிசாலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி 250 கோடி செலவும் பிரமாண்ட பங்களா கட்டி வருவதாக தகவல் பரவியது. அதுகுறித்து விளக்கம் அளித்த செந்தில்பாலாஜி ‘ எந்த இடத்தையும் புதிதாக வாங்கவில்லை’ என்று கூறினார்.

இதனை அடுத்து , அந்த வீடு செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவி நிர்மலா பெயரில் கட்டப்படுவதாக தெரிய வந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக செந்தில்பாலாஜி வட்டாரங்களில் சோதனை நடத்தி வரும் வருமான வரித்துறை அதிகாரிகள் நிர்மலாவின் பெயரில் கட்டப்பட்டு வரும் வீட்டையும் சோதனையிட்டனர்.

இந்த நிலையில் வீட்டின் கட்டுமானப்பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், வருமானவரி துறை அதிகாரிகள் அந்த வீட்டின் மதிப்பு 250 கோடி என கணக்கிட்டுள்ள நிலையில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் மதுரையை சேர்ந்த மாரிமுத்து இருவரும் நேரில் வந்து விளக்கம் அளிக்க அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த விவகாரத்தில் இருந்து செந்தில்பாலாஜியின் குடும்பம் தப்பித்துக்கொள்ளும். இல்லையென்றால் அமைச்சரின் மனைவி தொடங்கி செந்தில்பாலாஜி வரையிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார்கள்.

ஏற்கனவே செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டுக்கு சோதனைக்கு சென்ற அதிகாரிகளை திமுகவினர் தாக்கிய சம்பவம் அதிகாரிகளை பொறுமை இழக்க செய்துள்ளது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக சர்ச்சையாகி வந்த பிரமாண்ட பங்களாவுக்கும் செக் வைத்துள்ளது வருமான வரித்துறை.

இந்த வீட்டை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்த சவுக்கு சங்கர் வீட்டின் வேலை நின்றுவிட்டது. உள்ளே யாரோ குளித்துக்கொண்டிருக்கிறார்கள்.. அவர்கள் என்று செக்யூரிட்டியிடம் கேட்டேன். அவர், வட இந்திய தொழிலாளர்கள் குளிப்பதாக சொன்னார்… இனி வேலை நடக்க வாய்ப்பில்லை கட்டிடம் நின்றுவிடும் எனவே இருக்கிற வரையில் தொழிலாளர்களுக்கு நன்றாக சாப்பாடு போடுங்கள் என்று செக்யூரிட்டியிடம் பேசியதாக சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.