ஒரு ஆடையை ரூ.199-க்கு வாங்க விரும்புகிறீர்களா? வாங்கலாம். ஒரு ஆன்லைன் சந்தையில் கமிசன் இல்லாமல் உங்கள் பொருளை விற்க விரும்புகிறீர்களா? முடியும். இது என்ன புது புரளியா இருக்கு? என்று நினைக்காதீர்கள். மேலே கூறியுள்ள இரண்டும் ‘Ajio Street’ மூலம் சாத்தியம்.
ரிலையன்ஸிடம் ஏற்கனவே Ajio என்ற ஆன்லைன் சந்தை உள்ளது. இது முழுக்க முழுக்க ஆடை, அணிகலன் போன்ற பேஷன் சம்பந்தமான ஆன்லைன் சந்தை ஆகும். இதன் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் நிறுவனம் Ajio Street-ஐ நிறுவியுள்ளது.
இந்த Ajio Street-ஐ பொறுத்தவரை, அதில் விற்பனைக்கு இருக்கும் ஆடைகள், அணிகலன்கள் ரூ.199-ல் தொடங்கி குறைந்த விலைக்கு விற்பனை ஆகும். பொருட்களை வாங்கியப்பின் பிடிக்கவில்லை என்றால், அதன் ரிட்டர்ன் பாலிசிகளும் மிக மிக எளிது. மேலும் நீங்கள் விற்பனையாளராக இருந்தால், இந்த இணையதளம் மூலம் கமிஷன் இல்லாமல் ஆடைகளை விற்பனை செய்யலாம்.
இந்த ரிலையன்ஸ் ரிடைலின் புதிய சந்தை Amazon, Flipkart, Meesho போன்ற தளங்களுக்கு மிகுந்த போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் உலகின் குறைந்த விலை பேஷன் சந்தையான shein நிறுவனத்துடன் Ajio Street ஒப்பந்தம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.