திருப்பத்தூர் மாவட்டத்தில் செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவரது மகள் அதிசியா(17). இந்நிலையில் சந்தோஷ் குமார், தற்போது பிளஸ்-2 படித்து விடுமுறையில் இருந்த தனது மகளை அழைத்துக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் பால்னங்குப்பம் பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து அங்கு அதிசியா நீண்ட நேரம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால், சந்தோஷ் குமார் இதனை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அதிசியா, பாட்டி கடைக்குச் சென்றவுடன் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அதிசியாவை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அதிசியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.